Tuesday, May 15, 2012

இன்று சர்வதேச குடும்ப தினம்

ஒவ்வொருவரும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில், மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம், கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பலர், வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பம், இவர்களைத் தான் சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. விவாகரத்துகள், தந்தை, தாய் இல்லாத குழந்தைகள், ஒருங்கிணைப்பு இல்லாத குடும்பங்கள் போன்றவை நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தான் பலருக்கும் கவலை அளிக்கிறது. இத்தினத்திலாவாது குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்.
Source : Dinamalar Dt. 15.05.12.

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane