Thursday, December 8, 2011

Dinamalar News

சந்திரகிரகணம் பரிகாரம் செய்வது யார்

மதுரை : டிச., 10ல் முழு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும்.


முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும். சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.


ஊட்டியில் "ஜீரோ' டிகிரி செல்சியஸ் பதிவு : உறைபனியால் நடுக்கம்

ஊட்டி : ஊட்டியில் உறை பனிப்பொழிவு அதிகரித்து, நேற்று "ஜீரோ' டிகிரி செல்சியசை தொட்டது; அதிகாலை நேரங்களில், புல்வெளி பகுதிகளும், பள்ளதாக்கு பகுதிகளும், காஷ்மீரை நினைவுபடுத்துவதாக உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், நவம்பர் மாதம் முதல் வாரத்தில், உறை பனிப் பொழிவு இருந்தது. தொடர் மழையால், பனியின் தாக்கம் குறைந்தது. டிசம்பர் துவக்கத்தில் இருந்தே, பனிப்பொழிவு காணப்பட்டது. குறைந்த பட்ச வெப்பநிலை, 5 டிகிரியும், அதிகபட்ச வெப்பம் 18 டிகிரி செல்சியசாகவும் இருந்தது.
ஊட்டி தாவரவியல் பூங்கா அலுவலகத்தில், நேற்று அதிகாலை "ஜீரோ' டிகிரி செல்சியசாக குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. பஸ்நிலையம், ரயில் நிலையம், தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி., கால்பந்து மைதானம் உட்பட்ட புறநகர் புல்வெளி பகுதிகள் வெண் போர்வை போர்த்திக் காணப்பட்டன.
காஷ்மீரை நினைவுபடுத்திய பள்ளத்தாக்கு: பள்ளத்தாக்கு பகுதிகளான வேலிவியூ, கேத்தி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளான மூக்கூர்த்தி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து உட்பட பல்வேறு பகுதிகளும், காஷ்மீரை நினைவு படுத்தின. பள்ளதாக்கு பகுதிகளில் குறைந்த பட்ச வெப்பநிலை, "மைனஸ்' டிகிரி செல்சியசை தொட்டிருக்கும் என தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Sourece : Dinamalar Dt. 08.12.11.

1 comment:

ip dandeli said...

I am JS Kadagi, IP, Dandeli Sub Dn, NK Region, Karnataka. I served in APS about 10 years and joined to civil, during Aug 2010. During my stay at APS, I was friend of Sri SRS Gandhivel.
I heard that now Sri SRS Gandhivel is working as ASPOs in a postal division. May i know, his address and contact Nos. If any one know..... will you pl provide the whereabout of above sir,
My contacts;- mailtokadagi@gmail.com and cell No 9480809746, 9480963230.

All ASPs & IPs are requested to update Member Database in Right pane