புதுடில்லி : தபால் அலுவலகங்களில் சாதாரண சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருவாய் திட்டம் மற்றும் பொதுசேமநல நிதி திட்டம் போன்ற சிறுசேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: தபால் அலுவலக சாதாரண சேமிப்புக் கணக்கிற்கான வட்டி வீதம் 3.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர வருவாய் திட்டம் (எம்.ஐ.எஸ்.,) மற்றும் பொதுசேமநல நிதி திட்டங்களுக்கான (பி.பி.எப்.,) வட்டி வீதம் 8.2 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு செய்யப்படும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 6.25 சதவீதத்தில் இருந்து, 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதர கால அளவுடன் கூடிய டெபாசிட்களுக்கான வட்டி வீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுசேம நல நிதியில் முதலீடு செய்வதற்கான உச்சவரம்பு ஆண்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரங்கள் இனி கிடையாது. ஐந்து ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி வீதம் 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்து ஆண்டில் முதிர்வடையக்கூடிய, 8.7 சதவீத வட்டியுடன் கூடிய, தேசிய சேமிப்புப் பத்திரங்கள் வெளியிடப்படும். மாதாந்திர வருவாய் திட்டம் முதிர்வடையும் போது வழங்கப்படும் 5 சதவீத போனஸ் இனி கிடையாது. பொதுசேமநல நிதி மற்றும் மூத்த குடிமக்கள் திட்டத்திற்கான ஏஜன்ட் கமிஷன் இனி கிடையாது. மாதாந்திர வருவாய் திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு திட்டங்களுக்கான முதிர்வு காலம், தற்போதுள்ள ஆறு ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய வட்டி வீதங்கள் எல்லாம் விரைவில் வெளியிடப்படும் முறையான அறிவிப்புக்குப் பின் அமலுக்கு வரும். வட்டி வீதத்தை உயர்த்தும் முடிவு, ஷியாமளா கோபிநாத் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
Source : Dinamalar Dt. 12.11.11.
*******************************************************************************
New Delhi : Your investments in the Small Savings Scheme – Post Office Savings Scheme, National Savings Certificate and Public Provident Fund – will soon start earning higher interest rates that are benchmarked to market rates.
Ø The annual interest rate available on these schemes is at present below what an investor can get from bank deposits of comparable maturity.
Ø The government has announced a complete overhaul of the small savings scheme that has benchmarked rates of interest on these schemes to government securities, introduced a 10-year national savings certificate (NSC), increased the ceiling for public provident fund deposits to one lakh rupees every year and discontinued the Kisan Vikas Patra.
Ø The new rules will kick in when the government issues a notification.
Ø The decisions are based on the recommendation by a high level expert panel headed by former deputy governor of the RBI, Shaymla Gopinath.
Ø As per the memorandum issued by the finance ministry, returns on small savings instruments will be linked to government securities of similar maturities, pushing up the current rates on all instruments by 0.2% - 1.3%.
Ø Interest rates on postal savings will go up to 4% from 3.5% at present. In addition the maturity period of monthly investment schemes and national savings certificates will be reduced from six to five years.
Ø The ceiling on annual contributions to public provident fund will also be raised to 1 lakh from 70,000.
Ø The reforms will address the distortion caused by the small savings schemes in the overall interest rate structure of the economy. Depending on the market rates, these schemes either saw a large inflow of the big outflow, affecting the flows into banks in particular.
Ø When market rates are low, the high interest rates on small savings become a kind of subsidy to the investors.
Ø In the event, as is the case now, when interest rates on these schemes are below the market rates they see a big outflow, affecting the government’s fiscal management, as funds from these schemes are used by state governments and the centre.
Ø With bank deposits yielding more than 9% per annum, there has been a net outflow from the small savings schemes, which are administered by the National Small Savings Fund (NSSF), in the current year.
Ø This has forced the government to increase market borrowings by 52,800 crores over its budgeted fiscal target.
Ø The benchmarking of interest rates on small savings schemes will end this distortion, and also cut the volatility in inflows into these schemes.
Ø To reduce the cost of administration of the scheme, the government has also decided to lower the commission charged by agents that sell these schemes.
Ø As per the memorandum, the payment of agency commission on all schemes, except the Mahila Pradhan Kshetriya Bachat Yojana, will be either discontinued or reduced by at lease 0.5%. Women agents will continue to receive 4%.
Source : TOI.
No comments:
Post a Comment