தமிழகத்தில், நியாய விலை குடும்ப அட்டையின் ஆயுட்காலம், வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில், அட்டையை மேலும் ஓராண்டு நீட்டிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், 2009ம் ஆண்டுடன், ரேஷன் கார்டுகளின் ஆயுட்காலம் முடிந்தது. அப்போது, ஆட்சியில் இருந்த தி.மு.க., அரசு, கார்டில் கூடுதலாக
இருந்த இரண்டு பக்கத்துடன், 2010ம் ஆண்டும் தனியாக ஒரு இணைப்பு பக்கம் வழங்கி, அட்டையை 2011 வரை நீட்டிப்பு செய்தது.வரும் டிசம்பர் மாதத்துடன் இது முடிவடைவதால், 2012, ஜனவரி முதல், ரேஷன் பொருட்களை எப்படி வாங்குவது என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.2012 வரை நீட்டிப்பு:இதுகுறித்து, ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் கூறியதாவது:"ஆதார்' தேசிய அடையாள அட்டை வழங்குவதைப் போல, ரேஷன் கார்டுக்கான விவரங்களையும், பயோ மெட்ரிக் முறையில் சேகரித்து வழங்கினால், பெயர், விலாசம் போன்றவற்றை நீக்குவது, சேர்ப்பது, திருத்தம் செய்வது எளிதாவதுடன், போலி கார்டு தயாரிப்பதற்கும் வழி இருக்காது.தமிழக அரசு இதுகுறித்து பரிசீலித்து வருவதால், 2011 டிசம்பருக்குப் பின், புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் ஏதுமில்லை. ஏற்கனவே இணைக்கப்பட்ட பக்கத்தில், கூடுதலாக இரண்டு பக்கங்கள் உள்ளன. அதில், 2012 என குறிப்பிட்டு, இன்னும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு செல்வராஜ் கூறினார்.-நமது சிறப்பு நிருபர்-
Source : Dinamalar Dt. 30.11.11
No comments:
Post a Comment