சபரிமலை : சபரிமலையில், ஆன்-லைன் முன்பதிவு மூலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, தினமும் 2,500 பேர் பதிவு சீட்டுடன் வருகின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்காக, கேரள போலீஸ், இந்த ஆண்டு முதல், ஆன்-லைன் மூலம் முன்பதிவு முறையை அமல்படுத்தியது. இதற்கு,www.sabarimala.keralapolice.gov.in என்ற வெப்சைட்டை அறிமுகம் செய்தது.இதில், பக்தர்கள் தேவையான விவரங்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு ஒரு பிரின்ட் அவுட் கிடைக்கும். அந்த அத்தாட்சியுடன் செல்லும் பக்தர்கள், பம்பை முதல் சன்னிதானம் வரை எங்கும் கியூவில் நிற்க வேண்டாம். இவர்கள் பெரிய நடைப்பந்தல் வந்ததும் ஆன்-லைன் பதிவுக்காக அமைக்கப் பட்டுள்ள "ஸ்பெஷல் கியூவில் அனுமதிக்கப்படுவர். 18ம் படியருகே வந்ததும், இவர்கள் சாதாரண "கியூவில் வரும் பக்தர்களுடன் இணைந்து சென்று சாமி கும்பிட வேண்டும். நடை திறந்த, முதல் சில நாட்களில் ஆன்-லைன் பதிவில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. தற்போது, தினமும் 2,500 பேர் இந்த பதிவுடன் வருவதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் ஜன., 6 வரை மட்டுமே, இந்த வசதி இருக்கும். மகரவிளக்கு காலத்தில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், 7ம் தேதி முதல் இதை செயல்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன.
Source : Dinamalar Dt. 25.11.11
Viewers can browse in 5 Languages.
For more details : http://sabarimala.keralapolice.gov.inSource : Dinamalar Dt. 25.11.11
No comments:
Post a Comment