Thursday, April 9, 2015

கூகுள் டாக் இனி இயங்காது


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வந்த கூகுள் டாக்வசதி இனி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது. ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ள மிகவும் பயனுள்ள கருவியாக ஜி டாக்எனப்படும் கூகுள் டாக் இயங்கி வந்தது. ஆனால், தான் வழங்கி வரும் வசதிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் செயல்பாட்டினை கூகுள் மேற்கொண்டு வருவதன் எதிரொலியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தான் வழங்கும் கூகுள் Hangouts மூலம் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளுமாறு, தன் வாடிக்கையாளர்களுக்கு, கூகுள் அறிவுறுத்தியுள்ளது. பிப்ரவரி 23 முதல் ஜி டாக்வசதியை கூகுள் நிறுத்தி உள்ளது. 


கூகுள் ஹேங் அவுட், மற்றவற்றில் நமக்குக் கிடைக்காத சில வசதிகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இதில் பலர் ஒரு குழுவாக சேட்டிங் செய்திடலாம். இந்த வசதி மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், பலர் இந்த வசதி இருப்பதனை அறியாதவர்களாகவே உள்ளனர். அண்மையில் கூகுள் ஹேங் அவுட் புரோகிராமிற்கு வெளியிடப்பட்ட அப்டேட் பைல், அதனை ஸ்கைப் புரோகிராமிற்குப் போட்டியாக அமைத்தது.

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane