100 ஆண்டு தபால் நிலையம்!
கடந்த 1914 ம் ஆண்டு தனுஷ்கோடி-இலங்கை கப்பல் போக்குவரத்துக்கு இருநாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் இலங்கை செல்லும் பயணிகளின் உடல்நலம் பரிசோதிக்கும் இடமாக 300 ஏக்கரில் வீடுகள். மருத்துவமனைகள். பாஸ்போர்ட் அலுவலகம். தபால் நிலையம் கட்டப்பட்டது. அதில் தபால் நிலையம் 100 ஆண்டுக்குமேல் பழமையானது. இதைதான் “மண்டபம் முகாம்” என்று அழைக்கின்றனர். இதில் தற்போது இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
100 ஆண்டுக்கும் மேலாக கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடம் பிரிட்டிஷ் காலத்தில் பிரிட்டிசரால் கட்டப்பட்டது. இன்றும் இயங்கிவரும் தபால்நிலையம். இங்கு நாள் ஒன்றுக்கு உள்ளூர்-வெளிநாட்டு தபால்களும் குறைந்தது 400-600 வரை தபால் வருகிறது பணம் பரிவர்த்தனையும் இந்த தபால் நிலையம் பட்டுவாடா செய்து வருகிறது.
- ர.அரவிந்த்
No comments:
Post a Comment