வரும் 1-ஆம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்கட்டண உயர்வு விவரம் :
வீடுகளுக்கு...........................
* 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா உயர்வு. அதாவது,
* 100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு - ரூ.1.10 (ஒரு யூனிட்)
* 101-ல் இருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.1.80
* 201-ல் இருந்து 250 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3
* 251-ல் இருந்து 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு - ரூ.3.50
* 500 யூனிட் வரை பயன்படுத்துவோரில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.3
* 201-ல் இருந்து 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 4.
* 501 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ. 5.75
தொழிற்சாலைகளுக்கு........
தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.5.50 ஆக அதிகரிப்பு.
வர்த்தக நிறுவனங்களுக்கு.........
* 1 முதல் 100 யூனிட் வரை - ரூ.4.30
* 101 யூனிட்களுக்கு மேல் ரூ.7 கட்டணம்
* அலங்கார விளக்குகள் பயன்படுத்தினால் - ரூ.10.50
குடிசைத் தொழில், சிறு தொழில்களுக்கு.......
* 500 யூனிட் வரை - ரூ. 3.50
* 501 யூனிட்டுக்கு மேல் - ரூ.4
வழிபாட்டுத் தலங்களுக்கு...........
* 120 யூனிட் வரை ரூ.2.50
* 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5
விசைத்தறி கூடங்களுக்கு........
* முதல் 500 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை.
* 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.4
கல்வி நிறுவனங்களுக்கு.........
* அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் - ரூ.4.50
* தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5
விவசாயத்துக்கு வழங்கும் இலவச மின்சாரம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment