புதுடில்லி : வருமான வரி விலக்கு வரம்பை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகிறது.
வருமான வரி விலக்கு வரம்பு தற்போது, ரூ.1.8 லட்சமாக உள்ளது. இதை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பார்லிமென்டரி நிலைக்குழு பரிந்துரை செய்தது. அத்துடன் 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு மட்டுமே, 30 சதவீத வருமான வரி விதிக்கலாம் என்றும் கூறியது. தற்போது 8 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு, 30 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது.
இதேபோல், இந்திய தொழில்கள் சம்மேளனத்தின் இயக்குனர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜியும், "தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். ரூ.2.5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதமும், 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதமும் வரி விதிக்க வேண்டும். பணவீக்கம் அதிகரித்துள்ளதைத் தவிர்க்க, இதைச் செய்ய வேண்டும்' என, பரிந்துரை செய்திருப்பதாகக் கூறினார்.
இவற்றை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அதனால், வருமான வரி விலக்கு வரம்பு, அதிகரிப்பு மற்றும் வருமான வரி வீதங்களில் மாற்றம் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகலாம்.
Source : Dinamalar Dt. 06.02.12.
No comments:
Post a Comment