சென்னை : நாடு தழுவிய அளவில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தால், அஞ்சல் அலுவலக பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம், தனியார்மயம் உள்ளிட்ட, மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இவ்வேலை நிறுத்தத்தில், தபால் துறையின், அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகியவையும் பங்கேற்கின்றன.
இதுகுறித்து, அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க உறுப்பினர் சுந்தரமூர்த்தி கூறும் போது, ""இச்சங்கங்களில், நாடு முழுவதும் 4.5 லட்சம் ஊழியர்களும், தமிழகத்தில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால் இன்று, தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில், தபால் பட்டுவாடா, அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவு தபால் பதிவு உள்ளிட்ட முக்கிய பணிகள் பாதிக்கப்படும்,'' என்றார்.
Source : Dinamalar Dt. 27.02.12
No comments:
Post a Comment