ஆன்-லைன் மூலம் மின் கட்டணம் வசதி
Dinamalar Dt. 19.04.11.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்-லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறைக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் குறித்து தொழிலமைப்புகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தபால்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பொள்ளாச்சி தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் அண்ணாமலை கூறியதாவது: மின் நுகர்வோர் சிரமமின்றி ஆன்-லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட தபால் நிலையங்களில் இத்திட்டம் அமுலாகியுள்ளது. முதல்கட்டமாக, 21 தபால் நிலையங்களில் இந்த சேவை செயல்பாட்டிலுள்ளது.தினமும் 50 முதல் 70 வாடிக்கையாளர் வரை தபால் நிலையத்தில் ஆன்-லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துகின்றனர். இத்திட்டம் குறித்து தொழிலமைப்புகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இந்த சேவை விரிவுப்படுத்த முடியும். வாடிக்கையாளர்களுக்கும் இந்த சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்களில், 25 தபால் நிலையங்களில் இந்த சேவையை விரிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறலாம், என்றார்.

No comments:
Post a Comment