தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, முதல் முறையாக அஞ்சல் துறை மூலம் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும், 1 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திலிருந்து, அந்தந்த மாவட்ட, 'குடோன்'களுக்கு, புத்தகங்கள் அனுப்பப்படும். மாவட்ட கல்வித் துறையிடமிருந்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்வது வழக்கம்.
இந்த நடைமுறையில் பல குழப்பங்கள் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு, துவக்கப்பள்ளிகளுக்கு அஞ்சல் வழியே பாட நூல்கள் அனுப்பப்பட்டன. தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகளுக்கு சென்றடைந்ததால், இந்த ஆண்டு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு அஞ்சல் வழியே பட்டுவாடா செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக இவ்விரண்டு வகுப்புகள் மற்றும் பாடத்திட்டம் மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடங்களைத் தவிர, 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கான பாட நூல்களை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம், பள்ளி கல்வித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்ட குடோன்களுக்கும் அனுப்பியது. மெட்ரிக் பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று முதல் அஞ்சல் துறை மூலம் அனுப்பப்பட்டது.
1 comment:
Wats the profit for our dept because of this.
Post a Comment