Wednesday, July 27, 2011

மதுரையில் பி.எஸ்.என்.எல்.,ஆப்டிகல் "பைபர்' இணைப்பு :150 சேனல் பார்க்கலாம்

மதுரையில் பி.எஸ்.என்.எல்.,ஆப்டிகல் "பைபர்' இணைப்பு :150 சேனல் பார்க்கலாம்

மதுரை : பி.எஸ்.என்.எல்., ன் "வீடு தேடி வரும் பைபர் இணைப்பு' திட்டம் மதுரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்டிகல் "பைபர்' இணைப்பு, பிராட்பேண்ட் சேவையின் மைல்கல். வெளிநாடுகளில் இச்சேவை முழு பயன்பாட்டில் உள்ளது. பி.எஸ்.என்.எல்., சார்பில் எப்.டி.டி.எச்.,(பைபர் டூ தி ஹோம்) என்ற பெயரில் மதுரை உட்பட இந்தியாவின் பெருநகரங்களில் ஆப்டிகல் பைபர் இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இணைப்பில், தொலைபேசி, "டிவி', பிராட்பேண்ட் சேவைகளை பெறலாம்.
வேண்டிய சேவையை மட்டும் பயன்படுத்தும் வசதி, இத்திட்டத்தில் உள்ளது. "பேண்ட்வித்' 16 எம்.பி.,வரை கிடைப்பதால், எளிமையான "வீடியோ கலந்துரையாடல்' வசதி கிடைக்கும்.
.பி., "டிவி' சேவையில் 150 சேனல்கள் பார்க்கலாம். லோக்கல் சேனல்களை இடம்பெற செய்யவும், திட்டம் உள்ளது. மோடத்திற்கு பதிலாக .என்.டி., என்ற இயந்திரம் பொறுத்தப்படுகிறது. அதிலிருந்து 32 இணைப்புகள் தரலாம். தனிநபராக இணைப்பு பெற இத்திட்டத்தில் இடமில்லை. அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், வங்கி, தொழில் நிறுவனங்களில் இச்சேவையை பயன்படுத்தலாம். பிராட்பேண்ட் சேவையை விட கூடுதலாக 10 சதவீதம் கட்டணம், திட்டத்திற்கு ஏற்றபடி வசூலிக்கப்படுகிறது. மதுரையில் தல்லாகுளம், எல்லீஸ் நகர் பகுதியில் இதற்கான இணைப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 20 கி.மீ., தொலைவிலான பகுதிகளுக்கு மட்டும் இணைப்புகள் வழங்கப்படும்.
மதுரை பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் ராஜம் கூறியதாவது: இரண்டு கோடி ரூபாய் செலவில், இத்திட்டம் மதுரையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளில் மட்டும் இதற்கான இணைப்பு தரப்பட்டுள்ளது. அதிக இணைப்பு பெறுவோருக்கு, சலுகை வழங்கப்படும். இணைப்புகள் பெறவிரும்புவோர், 94861 02312, 2523838 ல் தொடர்பு கொள்ளலாம். நேரடி "டெமோ' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Source : Dinamalar Dt. 27.07.11

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane