Tuesday, January 4, 2011

தபால் நிலையங்களில் மின் கட்டணம் செலுத்தும் புதிய சேவை

கோவை தபால் நிலையங்களில் மின் கட்டணம் செலுத்தும் புதிய சேவை நேற்று முதல் துவங்கியது.
Dinamalar Dt. 04.01.11.
மின் கட்டணங்கள் தற்போது மின் நிலையங்களில் மட்டும் பெறப்பட்டு வந்தன. இந்த முறையை எளிமைப்படுத்த தபால் நிலையங்களிலும் மின் கட்டணத்தை செலுத்தும் வசதிக்கு அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதன்படி, கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், தபால் துறையில் இச் சேவை துவங்கியுள்ளது. கீழ்க்கண்ட 33 தபால் நிலையங்களில் மின் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை தலைமை தபால் அலுவலகம், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் கடைவீதி, சென்ட்ரல், கலெக்டர் அலுவலக தபால் அலுவலகம், கோர்ட், கோட்டை மேடு, கோவை- தெற்கு, வணிகவரி அலுவலகம், காந்திபுரம், கணபதி, குமாரபாளையம், கே.கே.புதூர், லாலி ரோடு, நீலிகோணம்பாளையம், ஓண்டிப்புதூர், பாப்பநாயக்கன்பாளையம், பி.என்.புதூர், பீளமேடு, பீளமேடு (வடக்கு), ராம்நகர், ராமநாதபுரம், ரத்தினபுரி, ரெட்பீல்ட்ஸ், எஸ்..எச்.எஸ்., கல்லூரி, சாய்பாபா மிஷன், சித்தாபுதூர், சிங்காநல்லூர், சவுரிபாளையம், சுக்ரவார்பேட்டை, டாடாபத், உப்பிலிப்பாளையம், வேலாண்டிப்பாளையம் ஆகிய இடங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். இத்திட்டத்தின் கீழ், ரொக்கமாக மட்டும் கட்டணம் செலுத்த முடியும்

தபால் நிலையத்தில் .பி.,பில் செலுத்தும் வசதி மாநகரில் அறிமுகம்
Dinamalar Dt. 03.01.11.
தூத்துக்குடி : நாளை முதல் (3ம் தேதி) தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தபால் நிலையங்கள் மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம். மாநகர் பகுதியில் உள்ள 16 தபால் நிலையங்களின் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. மின் இணைப்புதாரர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய மாதங்களில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மின் கட்டணம் செலுத்தி வந்தனர். கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இன்டர்நெட் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை தமிழக மின்சார வாரியம் அறிமுகம் செய்தது. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதேபோன்று தபால் நிலையங்கள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை தமிழக மின் வாரியம் நாளை (3ம் தேதி) முதல் அறிமுகம் செய்யவுள்ளது. தன் கட்டமாக பெருநகரங்களிலும் மட்டும் இத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. தற்போது பெரும்பலான தபால் நிலையங்களும் இன்டர்நெட் வசதியை பெற்றுள்ளதால் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக மின்வாரியமும், தபால் துறையும் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வேலுச்சாமியிடம் கேட்ட போது; தூத்துக்குடி மாவட்டத்தில் முதலில் தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தபடுகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம், மேலூர், நியூகாலனி, சிதம்பரநகர், துறைமுகம், முத்தையாபுரம், தெர்மல்நகர், சில்வர்புரம், போல்நாயக்கன்பட்டி, அழகேசபுரம், வி..,ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், கிப்சன்புரம், வடக்கூர், கீழுர் போன்ற 16 தபால் நிலையங்களில் பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம். இந்த மின் கட்டணம் தபால் நிலைய பணபரிவர்த்தன நேரத்தில் மட்டும் வசூல் செய்யப்படும் என்றார்.

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane