Monday, August 16, 2010

புதிய ரூபாய் குறியீடுடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்தியது டிவிஎஸ்

பெங்களூரு : கம்ப்யூட்டர் உபகரணங்கள் தயாரிப்பில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், புதிய ரூபாய் குறியீடுடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : டிவிஎஸ் கோல்ட் பாரத் கீபோர்ட் (சுருக்கமாக டிவிஎஸ் - இ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கீபோர்டின் உதவி கொண்டு எளிதாக புதிய ரூபாய் குறியீடை எளிதாக இடம்பெறச் செய்யலாம் என்றும், 490மிமீ நீளம், 180மிமீ அகலம் மற்றும் 20மிமீ உயரம் கொண்ட இந்த புதிய கீபோர்டு, யுஎஸ்பி மற்றும் பிஎஸ்2 சப்போர்டை பெறும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்ரேடிங் சிஸ்டங்களில் இந்த புதிய கீபோர்டு தங்குதடையின்றி இயங்கும் என்றும், இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட டிவிஎஸ் - இ கீபோர்டின் விலை ரூ. 1,495 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், புதிய ரூபாய் குறியீடு கொண்டுள்ள கீபோர்டை வடிவமைத்த முதல் மற்றும் இந்தியாவின் ஒரே நிறுவனம் என்ற பெருமையை டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெறுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinamalar.

No comments:

All ASPs & IPs are requested to update Member Database in Right pane