Monday, February 23, 2015

காந்தி தோற்றத்தில் சுற்றுலா பயணி

மூணாறு: காந்தியின் தோற்றத்தில் இந்தியா விற்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆச்சரியத் துடன் பார்த்து வருகின்றனர்.



பிரான்ஸ் நாட்டில் துளோஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோனெட், 68. இவர் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய உருவ அமைப்பு சிறிய வயது முதல் காந்தியை போன்று இருந்துள்ளது. இதனை ஜோனெட்டிடம் பலர் கூறியுள்ளனர். தவிர காந்தியின் வரலாற்றையும் தெரிவித்தனர். இதனால் இவர் மீது மரியாதை ஏற்பட்டதுடன், அவரது தோற்றத்தில் இந்தியாவில் உலவ வேண்டும் என்ற ஆசை ஜோனெட்டுக்கு மேலோங்கியது.


இதையடுத்து ஜோனெட் ஜன.,24ல் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். மகாத்மா காந்தியின் தோற்றத்தில் உள்ளதால், ஜோனெட் சென்ற இடமெல்லாம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மூணாறுக்கு இவரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். காந்தியின் தோற்றத்தில் உள்ளதால் செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் தன்னை சூழ்ந்து கொள்வதாக கூறுகிறார்.இந்தியாவில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை செல்லும் ஜோனெட் ஏப்., 24ல் பெங்களூரு வழி சொந்த நாட்டிற்குச் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

Courtesy : DInamalar.

No comments:

Post a Comment