Wednesday, January 14, 2015

Pongal wishes



தை பொங்கல்

உழவர் விழா.
அறுவடை விழா.
முதன்மை கடவுளான சூரியனுக்கு நன்றி சொல்லும் விழா.
இது ஒரு நான்கு நாள் விழா.
நாள் : மார்கழி மாதத்தின் கடைசி நாள் முதல் தை மாதத்தின் மூன்று நாட்கள் வரை.
January 14th to 16th.

 
முதல் நாள் : போகி பண்டிகை
மார்கழி மாதத்தின் கடைசி நாள்.
பழையன எரித்தலும் புதியன புகுதலும்.
பஞ்சாப் ல் லோஹ்ரி (LOHRI) மற்றும் அஸ்ஸாம் ல் மக்ஹ பீகு ( Magh Bihu ) / போகலி பிகு (Bhogali Bihu )

இரண்டாம் நாள் : தை பொங்கல்
இன்று தான் சூரியன் தனது ஆறு மாத பாதையை தட்சிணாயனம்-ல் இருந்து உத்தராயணம்-ல் மாற்றுகிறார்.
மேலும் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் 10 இடமான மகரத்தில் பிரவேசிக்கிறார்.
இது தமிழர்களின் முக்கியமான திருவிழாவாகும்.
இது உலகமெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கை, மொரிஷியஸ் மற்றும் பல.

பொங்கல் என்றல் என்ன ? பொங்கி வருவது.
சூரிய உதயத்திற்கு முன்பாக மண் அடுப்பில், மண் பாத்திரத்தில் பொங்கல் வைத்து அது பொங்கும் பொது பொங்கலோ பொங்கல் என்று சொல்ல வேண்டும். பொங்கல் பொங்குவது போல நம் வாழ்வும் செழிக்க வேண்டும் என்பது.
மேலும் தை பிறந்தால் வழி பிறக்கும்.
இது சுமார் ஆயிரம் ஆண்டு கால பழமையான விழாவாகும், சோழர் காலம் முதல்.
மகர சங்கராந்தி ஆக வட இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  
மூன்றாம் நாள் : மாட்டு பொங்கல்
உழவர்களின் வாழ்வில் மாடு, எருது, கன்றுகளின் பங்கு மிக மிக முக்கியமானது. இவற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும்.
இவை அனைத்தையும் நன்றாக அலங்கரித்து, கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து, மாலை அணிவித்து, குங்குமம் இட்டு, பூஜை செய்வார்கள். மேலும் அதற்க்கு வெண் பொங்கல், வெல்லம், பழம், தேன் கொடுப்பார்கள்.
மேலும் இவற்றிக்கு கற்பூரம் காட்டி, மூன்று முறை வலம்வருவார்கள். இது திர்ஷ்டி ஆகும்.
தென் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தமானது.




காணு பிடி : பெண்கள் பறவைகளுக்கு உணவளித்து, தாங்கள், தங்களது உடன் பிறந்தோர், குடும்பம் அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்வார்கள். வித விதமான அரிசிகள், வேகவைத்த காய்கறிகள், பழம், சக்கரை பொங்கல், இஞ்சி ஆகியவற்றை வாழை இலையில் வைத்து காகத்திற்கு படைத்து வரவழைப்பார்கள்.
இது ஆந்திராவில் முக்கனுமா (Mukkanuma) என்று அழைக்கப்படுகிறது
 

நான்காம் நாள் : காணும் பொங்கல்.
இது குடும்பங்கள் ஒன்று சேரும் விழா.
அனைவரும் தங்களுது சொந்தங்களின் வீடுகளுக்கு செல்வார்கள்.
அண்ணன்கள் தங்களுது தங்கைகளுக்கு அன்பு பரிசு அளிக்கும் விழா.
முதலாளிகள் தங்களுது தொழிலாளர்களுக்கு பரிசு, துணி, பணம் வழங்குவார்கள்.
நகரங்களில் பொது இடங்களுக்கு செல்வார்கள் குறிப்பாக, பார்க், பீச், கோவில்.






நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கும் இனிய உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் செழிப்பாக இருக்க வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment