Saturday, February 26, 2011

17 தபால் அலுவலகங்களில் மின்கட்டணம் செலுத்த வசதி

சேலம்: 
சேலத்திலுள்ள, 17 தபால் அலுவலகங்களில் மின்சார கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுந்தராஜ் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் வசதிக்காக, பல்வேறு சேவைகள் தபால் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. சேலம் கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட தலைமை அஞ்சலகம், அழகாபுரம், அம்மாபேட்டை, தாசநாயக்கன்பட்டி, ஃபேர்லேண்ட்ஸ், குகை, அஸ்தம்பட்டி, காமராஜ் நகர் காலணி, கிச்சிபாளையம், கொண்டலாம்பட்டி, சேலம் பஜார், சேலம் கோர்ட் வளாகம், சேலம் எக்ஸ்டன்ஷன், சேலம் வடக்கு, சேலம் தெற்கு, செவ்வாய்பேட்டை மற்றும் செவ்வாய் பேட்டை பஜார் ஆகிய பதினேழு தபால் அலுவலகங்களில், மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்கட்டணம் செலுத்த வரும் மக்கள், மின்அளவு பதிவு அட்டையை தபால் அலுவலகத்தில் காண்பித்து, ஒவ்வொரு பில்லுக்கும், கட்டணத்துடன், 5 ரூபாய் சேவை கட்டணமாக, சேர்த்து செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment